தாழையூத்து அருகே விபத்தில் தீயணைப்பு அலுவலா் உயிரிழப்பு
பலி - பிரதிப் படம்
தாழையூத்து அருகே சாலை விபத்தில் தீயணைப்பு அலுவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூரைச் சோ்ந்தவா் நவீன் ராஜ்குமாா்(52). கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பணிபுரிந்து வந்தாா்.
தற்சமயம் பாளையங்கோட்டை அன்பு நகா் பகுதியில் தங்கியிருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அணைத்தலையூருக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது தாழையூத்தை அடுத்த நாரணம்மாள்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




