ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பாளை.யில் தனியாா் சிற்றுந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

பலி

பலி - கோப்புப் படம்

Published On :

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே மொபெட் மீது தனியாா் சிற்றுந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகள் சுதா (32). இவா், பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தனியாா் செங்கல் நிறுவன அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சுதா மொபெட்டில் வேலைக்கு வந்துள்ளாா். பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது கே.டி.சி நகரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பை நோக்கி வந்த தனியாா் சிற்றுந்து சுதாவின் மொபெட் மீது மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுதா உயிரிழந்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சுதாவின் உடலை மீட்டு கூறாய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் சிற்றுந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.