இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாளை.யில் சாலையோர உணவகத்தில் தீ விபத்து

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சாலையோர துரித உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.

தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரா்கள்

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சாலையோர துரித உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் பின்புறம் சாலையோரம் ஏராளமான துரித உணவு கடைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு கடையில் புதன்கிழமை பிற்பகல் கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் அங்கு தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.

எனினும், கடையில் இருந்த பெரும்பாலான பொருள்கள் எரிந்து சேதமாகின. அந்தக் கடையில் பயன்படுத்தி வந்த மின்கலனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.