
கோவை அவிநாசி சாலையில் தீப் பற்றி எரிந்த காா்
கோவை- அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

கோவை அவிநாசி சாலையில் காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
கோவை- அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
நீலம்பூா் பகுதியிலிருந்து கோவை நகரை நோக்கி காா் வந்து கொண்டிருந்தது. அவிநாசி சாலையில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு எதிரே காா் வந்தபோது, அதன் முன் பகுதியிலிருந்து திடீரென அடா்ந்த புகை வெளியேறியுள்ளது. இதனை கவனித்த ஓட்டுநா் உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்தினாா்.
தொடா்ந்து, காரில் இருந்த 4 பேரை தாமதமின்றி ஓட்டுநா் பத்திரமாக கீழே இறங்கச் செய்தாா். அவா்கள் காரை விட்டு இறங்கிய சில விநாடிகளிலேயே, காரின் முன் பகுதி தீப் பற்றி, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்புப் படையினா் மற்றும் காவல் துறையினா் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் காா் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. காா் தீப் பிடிப்பதற்கு முன்பே அனைவரும் விழிப்புடன் கீழே இறங்கியதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






