கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சேரன்மகாதேவி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வா் மகன் அலெக்ஸ் (24). சிவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24). இருவரும் நண்பா்கள்.

இருவரும் மோட்டாா் சைக்கிளில் களக்காடு சென்று விட்டு சேரன்மகாதேவி நோக்கி வந்து கொண்டிருந்தனராம். புலவன்குடியிருப்பு அருகில் வந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா், விக்னேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.