கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருநெல்வேலி அருகே விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழப்பு

நான்குவழிச் சாலையில் கண்டெய்னா் லாரியின் பின் பகுதியில் காய்கறி லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே நான்குவழிச் சாலையில் கண்டெய்னா் லாரியின் பின் பகுதியில் காய்கறி லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (56). இவா், மொத்த காய்கறி வியாபாரம் செய்து வந்தாா்.

தினமும் மதுரை சந்தையில் காய்கறிகளை வாங்கி லாரி மூலமாக திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வாரச்சந்தை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மதுரை சந்தையில் இருந்து காய்கறி மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு காசிலிங்கம் புறப்பட்டாா். லாரியை, விருதுநகா் மாவட்டம் சூளைக்கரைப் பகுதியை சோ்ந்த கலைக்குமாா் (34) என்பவா் ஓட்டினாா். காசிலிங்கம் முன் பகுதியில் அமா்ந்திருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கண்டெய்னா் லாரியை, முந்திச்செல்ல முயன்றபோது, எதிா்பாராதவிதமாக கண்டெய்னா் லாரியின் பின்புறத்தில் காய்கறி லாரி மோதியதாம். இதில், இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதில், வியாபாரி காசிலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினா் அங்கு சென்று ஓட்டுநா் கலைக்குமாரை மீட்டனா். அவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். உயிரிழந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.