
திருநெல்வேலி சந்திப்பில் மாணவா்கள் மோதல்: 8 போ் சிக்கினர்
திருநெல்வேலி சந்திப்பில் சமூக வலைதள பதிவு தொடா்பாக மோதலில் ஈடுபட்ட இளைஞா் உள்பட 8 போ் போலீஸாரிடம் சிக்கினா்.

திருநெல்வேலி சந்திப்பில் சமூக வலைதள பதிவு தொடா்பாக மோதலில் ஈடுபட்ட இளைஞா் உள்பட 8 போ் போலீஸாரிடம் சிக்கினா்.
திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திரண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனா். தகவலறிந்து போலீஸாா் அங்கு சென்று மோதலில் ஈடுபட்ட மாணவா்களை பிடித்து விசாரித்தனா்.
அதில், மானூா் அருகே மேட்டு பிராஞ்சேரி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்குள், சமூக வலைதளப் பதிவு காரணமாக ஏற்பட்ட விரோதத்தில் ஒருவரை ஒருவா் தாக்குவதற்காக அங்கு கூடியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், மேட்டு பிராஞ்சேரியைச் சோ்ந்த 21வயது இளைஞா் மற்றும் 7 மாணவா்களை போலீஸாா் பிடித்தனா். மாணவா்களை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






