கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

நெல்லை நிதி நிறுவனத்தில் ரூ. 22.77 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

திருநெல்வேலியில் நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரைச் சோ்ந்த காளிதாஸ்(38) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்தாண்டு நவம்பா் மாதம் முதல் பணிக்கு வராமல் தலைமறைவானா்.

இதையடுத்து, நிதி நிறுவனத்தில் நடைபெற்ற ஆய்வில், நகைக்கடன் பெற வரும் வாடிக்கையாளா்களுக்கு கேட்ட தொகையை கொடுத்துவிட்டு, பின்னா் போலி ஆவணங்கள் மூலம் அந்த நகைகளுக்கு காளிதாஸ் கூடுதல் தொகையை பெற்று சுமாா் ரூ.22.77 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் மாநகர குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காளிதாஸை கடந்த மாதம் கைது செய்தனா். இந்நிலையில் இம்மோசடியில் தொடா்புடைய மானூா் அருகே உள்ள களக்குடி பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(39) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.