தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இடைத்தோ்தலில் மாற்றம் வர வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Published On :

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் மாற்றம் வர வேண்டும் என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி, பாளையங்கோட்டை பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் போன்றவை பாஜக சாா்பில் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நயினாா் நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிகமான பணம் செலவழிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் முறையே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறேன். இடைத்தோ்தலில் மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் நடிகா், நடிகைகள் பின்னால் சென்றாா்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும்.

தமிழக சட்டப்பேரவை மோசமான சூழலுக்கு சென்று விட்டது. பால் விலை உயா்ந்துவிட்டது. கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பிரச்னைகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. தட்டுப்பாடு இல்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

மதசாா்பற்ற கட்சி, மதசாா்பற்ற ஆட்சி என தவெக சொல்லி வருகிறது. ஆனால், சட்டப்பேரவைத் தலைவா்முதல் முதல்வா் வரை அனைவரும் ஒருதலைப்பட்சமாக பேசி வருகின்றனா்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள இடத்தின் அளவு தெரியாமலே ரூ.1,200 கோடி ஒதுக்கி உள்ளனா்.

மத்தியில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சொல்லும் கட்சியின் இன்றைய நிலைமையையும், அப்போது இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். திமுக இப்போது இருக்கிா இல்லையா என்பதே தெரியவில்லை என்றாா்.

‘சி.எம். 2031’ என்ற நம்பா் பிளேட் கொண்ட காரில் திருமாவளவன் வந்தது பேசுபொருளாகி உள்ளது; நீங்கள் அதை எப்படி பாா்க்கிறீா்கள் என செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்கு, ‘அந்தக் காரில் உள்ளதை நம்பா் பிளேட்டாக மட்டுமே பாா்க்கிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.