
திருக்குறுங்குடியில் தூய்மைப் பணியாளா்கள் நல முகாம்
களக்காடு அருகே திருக்குறுங்குடி பேரூராட்சியில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்கள் நல முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்கள் நல முகாமில் பங்கேற்றோா்.
களக்காடு அருகே திருக்குறுங்குடி பேரூராட்சியில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்கள் நல முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் ந. சாந்தி தலைமை வகித்தாா். முகாமில், திருக்குறுங்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி, அவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அலுவலா்கள் சால்வை அணிவித்து, நற்சான்றிதழ் வழங்கினா்.
பேரூராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






