ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

திருவட்டாறு அருகே தகராறு: 3 பேர் கைது

திருவட்டாறு அருகே குடும்பத் தகராறில் சமரசம் பேச வந்த வார்டு உறுப்பினரைத் தாக்கியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

Published On :

திருவட்டாறு அருகே குடும்பத் தகராறில் சமரசம் பேச வந்த வார்டு உறுப்பினரைத் தாக்கியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆற்றூர் பண்டாரவிளையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (48). இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். இதுகுறித்து ஹேமா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, ஹேமாவின் உறவினர்கள் ஆற்றூர் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த கிறிஸ்டோபரை தாக்கி வாகனத்தில் ஏற்றி, அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனராம்.

இந்நிலையில் அங்கு வந்து சமரசம் பேசிய ஆற்றூர் பேரூராட்சி உறுப்பினர் ஏனோஸை (47) அக்கும்பல் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ஏனோஸ், திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து தாக்குதல் நடத்திய ஜெபர்லின் (19), ஆனந்த லால் (19), ஜெபின் (20) ஆகியோரை கைது செய்தனர். ஹேமா உள்பட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.