வாக்குச் சாவடி அதிமுக பொறுப்பாளர்கள் அமைப்புக் கூட்டம்
திற்பரப்பில் அதிமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் அமைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திற்பரப்பில் அதிமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் அமைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவட்டாறு ஒன்றிய அதிமுக செயலர் ஜெயசுதர்சன் தலைமை வகித்தார். திற்பரப்பு ஜெயலலிதா பேரவைச் செயலர் பி. முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் பேசினார்.
முன்னாள் மாவட்டச் செயலர் சிவகுற்றாலம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பி.சி.என். திலக்குமார், முன்னாள் எம்எல்ஏ ராஜன், கட்சி நிர்வாகிகள் டாக்டர் ஆல்பிரட், பி.டி. செல்லப்பன், சலாம், குலசேகரம் பேரூர் செயலர் ஆர். முருகன், ஒன்றியப் பொருளாளர் பென்சிகர், திருவட்டாறு பேரூர் செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திற்பரப்பு பேரூர் செயலர் பிஜூ குமார் நன்றி கூறினார்.
இதில், திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட 17 வாக்குச் சாவடிகளுக்கும் தலா 15 பொறுப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

