குழித்துறை சந்திப்பில் தனியார் பள்ளி வேன் மீது காய்கனி ஏற்றி வந்த மினிலாரி மோதியதில் பள்ளி ஆசிரியை மற்றும் 4 மாணவியர் காயமடைந்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வேன் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் பள்ளி நோக்கி புறப்பட்டது. வேன் குழித்துறை சந்திப்பில் வந்த போது பின்னால் வந்த காய்கனி ஏற்றிவந்த மினிலாரி பள்ளி வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த ஆசிரியை மரியகிரி பகுதியைச் சேர்ந்த பிரான்சீஸ் மனைவி நிர்மலாதேவி (38), 11 ஆவது வகுப்பு படிக்கும் நெல்லிக்காதுறுவல் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெனிஷா (16), 11 ஆவது வகுப்பு படிக்கும் மேக்கோடு வல்சலம் மகள் சினு (16) 6 ஆம் வகுப்பு படிக்கும் களியக்காவிளை பாலப்பழஞ்சி ஆன்றணி மகள் அப்ஷனா பெரடிட் (11), 6 ஆவது வகுப்பு படிக்கும் மலையடி பகுதியைச் சேர்ந்த ஹென்றி கஸ்லால் மகன் ஹென்றிக் போசிக்கா (11) ஆகியோர் காயமடைந்தனர்.
இம் மாணவியரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK

டாக்ஸிக் படத்தினால் கிடைத்த நன்மைகள்... மனம் திறந்த கியாரா அத்வானி!

நயன்தாரா - கவின் நடித்த 'ஹாய்' படம் - புகைப்படங்கள்
விடியோக்கள்

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK


