தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பைக் மோதி பெண் சாவு

புதுக்கடை அருகே இனயம் சின்னத்துறை பகுதியில், பைக் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் இறந்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:01 pm

DIN

புதுக்கடை அருகே இனயம் சின்னத்துறை பகுதியில், பைக் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் இறந்தார்.
இனயம் சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் மனைவி பனியம்மை (55). இவர்,  புதன்கிழமை அப்பகுதியில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார். அப்போது  எதிரே குளச்சல் பகுதியைச் சேர்ந்த  பெலிக்ஸ் (18) ஓட்டி வந்த பைக் மோதியதில்,  அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.