ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை

சவூதி அரேபிய நாட்டிலுள்ள அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட  குமரி மீனவர்கள் 5 பேரை  மீட்க மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:47 am

DIN

சவூதி அரேபிய நாட்டிலுள்ள அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட  குமரி மீனவர்கள் 5 பேரை  மீட்க மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணத்தைச் சேர்ந்த  ஜெர்னால்டு ரீகன், கரோல் ஜெகின்,  ஜான் பிரபாகர்,  ரீகன் ஜியோ கிளார்வின், மிடாலம் பகுதியைச் சேர்ந்த  ஜோஸ் ஸ்டாலின் ஆகியோர் கஸ்வானி என்ற படகில் கத்தார் வாஹ்ரா என்ற பகுதியிலுள்ள கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கடலில் மீன்பிடித்தனர். அப்போது, எல்லை  தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி  கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து,  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேற்கண்ட 5 பேரையும் விடுதலை செய்யவேண்டி  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார்.
இதையடுத்து, கரோல் ஜெகின், ரீகன், ஜான்பிரபாகர் மற்றும் ஜோஸ் ஸ்டாலின் ஆகிய 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள்  அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேரும் ஓரிரு நாள்களில் சொந்த ஊர் திரும்புவர்.  ஜெர்னால்டு ரீகனும் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய தூதரக அதிகாரி தினேஷ்குமார் கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.