தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திற்பரப்பில் மழை நீர் மடை அடைப்பு பிரச்னை: 8 பேர் மீது வழக்கு

திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு பகுதியில் மழை நீர் வடிந்து செல்லவிடாமல் தடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:32 pm

DIN

திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு பகுதியில் மழை நீர் வடிந்து செல்லவிடாமல் தடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  பிணந்தோடு பகுதியில் சாலையின் குறுக்காக அடிமடை உள்ளது. இந்த அடிமடை வழியாகப் தண்ணீர்  பாய்ந்து அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்று கொண்டிருந்தது. கடந்த சில  ஆண்டுகளாக அப்பகுதியிலுள்ள சிலர்  அடிமடையை அடைத்து தண்ணீர் செல்வதை தடுத்தனராம்.
   இந்நிலையில் கடந்த வாரம் இப்பகுதியில் பெருமழை பெய்தபோது சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.  இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று அடிமடை  அடைப்பைத் திறக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடந்ததாம். இதையடுத்து இரு தரப்பினரும் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.     இப்பிரச்னை  தொடர்பாக   விசாரித்து வந்த போலீஸார் வியாழக்கிழமை ஒரு தரப்பில் பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி உள்பட  5 பேர் மீதும்,  மற்றொரு தரப்பில்  சாம்ஜெபா ஆபிரகாம் ஜெயா,  சாம்ராஜ்  ஆகியோர்  மீதும்   வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.