தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் விதத்தில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டும் நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:53 am

கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் விதத்தில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டும் நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வரும் நிலையிலும், ஆறுகளில் வெள்ளம் குறைவாகவே பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றிலும் தண்ணீர் குறைவான அளவிலேயே வரத்து உள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதமாக குளிக்கும் அளவுக்கு இங்கு தண்ணீர் கொட்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 
மேலும், சுற்றுலாப் பயணிகளில் பலர் இங்குள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
இதே போல் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.