இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெண்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும் என்ற தலைப்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற 2 நாள் சர்வதேசக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருநெல்வேலி சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கின் தொடக்க விழாவுக்கு, அமைப்பின் நிறுவனர் கு.பரமசிவன் தலைமை வகித்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிச் செயலர் அந்தோணிசாமி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். இதில், மத்தியப் பிரதேசம் சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிகுமார், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சல்பியா ஜலீல், தூய யோவான் கல்லூரிப் பேராசிரியர் பென்சன், அரசு சட்டக் கல்லூரி பேராசிரியை துர்காலட்சுமி ஆகியோர் பேசினர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை அல்போன்சா நன்றி கூறினார்.
2ஆம் நாள் கருத்தரங்கில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் 186 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முனைவர் ராஜவர்மன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனுசுயா, பொருளாதாரத் துறை பேராசிரியர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றினர்.
சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மைய பொறுப்பாளர்கள் ஜெ.எடிசன், வ.பாலமுருகன், ஐயப்பன், த.அருண்குமார், சசிகுமார், மகாராஜன், சமூக ஆர்வலர் துரைக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? தொல்.திருமாவளவன்

தொகுதி மறுசீரமைப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் - கேரள முதல்வா் வலியுறுத்தல்

தோ்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறாா் முதல்வா்: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

