மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:57 am IST

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நாகர்கோவில் சிஐடியூ கிளையின் 31ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.பொன்குமார் தலைமை வகித்தார். வி.தாமோதரன் பிள்ளை சங்கக் கொடியேற்றினார். உதவித் தலைவர் ஏ.பகவதியப்பன் வரவேற்றார். சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர் பி.இந்திரா தொடக்கவுரையாற்றினார். 
கூட்டத்தில், "அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பின்னர் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, பேருந்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; தொழிலாளர்களை இரட்டிப்பு பணிச்சுமைக்கு நிர்பந்திக்கக்கூடாது; விரைவுப் போக்குவரத்துப் பணியாளர்களுக்கு பணி ஓய்வுபெறும் தினத்திலேயே பணபலன்களை வழங்க வேண்டும்; பழுதடைந்த சாலைகளில் பேருந்துகளை இயக்கக்கூடாது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில், சங்கச் செயலர் டி.எஸ்.ஜான்ராஜன்அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.முருகன் வரவு- செலவு அறிக்கை வாசித்தார். 
சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர்கள் பொன்.சோபனராஜ், கே.பி.பெருமாள், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க துணைப் பொதுச்செயலர் எம்.டென்னிஸ் ஆண்றனி, தலைவர் ஜி.செந்தில், சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பொன் குமார், செயலராக ஜான்ராஜன், பொருளாளராக முருகன் உள்பட 20 பேர் கொண்ட நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது.  அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலர் எம்.கனகராஜ் நிறைவுரையாற்றினார். உதவிச் செயலர் பி.ஆதிலிங்கம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.