பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

நாய்ப் பண்ணையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:56 am IST

ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜான்விக்டர்தாஸ் தலைமையில், ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த  மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் அளித்த மனு:
தோவாளை வட்டத்துக்குள்பட்ட ஈசாந்திமங்கலம் பகுதியில் அண்ணா காலனி உள்ளது. இங்கு 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட 100 வீடுகள்  உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில்  சட்ட விரோதமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 2 வீடுகளை இடித்து விட்டு நாய்ப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளிடம்  பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே,  நாய்ப்பண்ணை வைத்துள்ளவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.