ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

நல்லூர் பேரூராட்சியில் பாஜக ஆர்ப்பாட்டம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி

Updated On :18 ஏப்ரல் 2018, 6:58 am IST

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நல்லூர் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பிரதாப்சிங், ராஜேந்திரன், அரிச்சந்திரன், சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கிள்ளியூர் ஒன்றிய பாஜக தலைவர் தாணுமூர்த்தி, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், கிள்ளியூர் ஒன்றியப் பார்வையாளர் சுடர்சிங், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ரவீந்திரன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.