வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குமரி மாவட்டத்துக்கு கனிமொழி எம்.பி. இன்று வருகை

திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை (மே 1)   கன்னியாகுமரி  மாவட்டத்துக்கு வருகிறார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:51 pm

DIN

திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை (மே 1)   கன்னியாகுமரி  மாவட்டத்துக்கு வருகிறார்.
இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன்  எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: 
திமுக மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி.  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்காக  மே 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். காலை 11.30  மணிக்கு கன்னியாகுமரியில் மாவட்ட திமுக சார்பில் எனது(சுரேஷ்ராஜன்)  தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.  மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறும் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 
மே 2ஆம் தேதி காலை 10  மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசுகிறார். மாலை 6 மணிக்கு சுசீந்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். 
இந்நிகழ்ச்சிகளில் திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகரச் செயலர்கள்,துணை  அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.