சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மார்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

Updated On :

மார்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
மார்த்தாண்டத்தை அடுத்த  பாகோடு பகுதியில் நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை பூஜை முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. சனிக்கிழமை காலை கோயில் பூசாரி நடை திறக்க வந்தபோது கோயிலின் மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுக்கு பூசாரி தகவல் கொடுத்தார். அங்கு வந்த கோயில் நிர்வாகிகள், சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தியதில், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் முழுவதும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.