மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

குமரி மாவட்டத்தில் மழை தீவிரம்: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் மீண்டும் கன மழை பெய்து வருவதால்,  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் மீண்டும் கன மழை பெய்து வருவதால்,  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் அதிகளவில் பெய்தது. கடந்த 2 நாள்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், புதன்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி அளவில் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. 
பாலமோரில் 47.2 மி.மீ. மழை பெய்ததால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,466 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 1137 கனஅடி தண்ணீரும் வரத்தாக உள்ளது. இதனால் பெருஞ்சாணி அணை 75 அடியையும், பேச்சிப்பாறை அணை 20.10 அடியையும் எட்டியுள்ளன.
மழையால் அணைக்கு வரும் கூடுதல் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24  மணி நேரத்தில்  மாவட்டத்தில் அதிகபட்சமாக கன்னிமாரில் 54 மி.மீ. மழை பெய்தது. பூதப்பாண்டியில் 22 மி.மீ., சிற்றாறு 1இல் 52 மி.மீ., களியலில் 15மி.மீ., கொட்டாரத்தில் 22மி.மீ.,  குழித்துறையில் 37மி.மீ., நாகர்கோவிலில் 10மி.மீ., பேச்சிப்பாறையில் 46மி.மீ.,  பெருஞ்சாணியில் 39மி.மீ., புத்தன் அணையில் 41மி.மீ., சிற்றாறு 2இல் 31மி.மீ., சுருளோட்டில் 43 மி.மீ.,  தக்கலையில் 22 மி.மீ.,  குளச்சலில் 14 மி.மீ.,  இரணியலில் 19மி.மீ.,  மாம்பழத்துறையாறில் 30 மி.மீ.,  கோழிப்போர்விளையில் 31மி.மீ.,  அடையாமடையில் 23 மி.மீ.,  குருந்தன்கோட்டில் 14 மி.மீ.,  முள்ளங்கினாவிளையில் 36 மி.மீ.,  ஆனைக்கிடங்கில் 28 மி.மீ. மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில்  இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தோவாளை கால்வாய்,  அனந்தனாறு கால்வாய், புத்தனாறு கால்வாய்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 
அணைகளின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவின் செயற்பொறியாளர் வேதஅருள்சேகர் கூறியது:  அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால் அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். எனவே குழித்துறை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன. செண்பகராமன்புதூரா,  தடிக்காரன்கோணம்,  தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கீரிப்பாறை,   காளிகேசம் பகுதிகளில் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.