உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

குமரி மாவட்டத்தில் வெள்ளத்தில் மிதக்கும் 10 ஆயிரம் வீடுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 
இம்மாவட்டத்தில், தென் மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் கன மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அணை,  நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.
பழையாறு,கோதையாறு, பரளியாறு,  குழித்துறையாறு என அனைத்து ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், ஆற்றங்கரையோர கிராமங்களுக்குள் புகுந்தது. 
இதில், நித்திரவிளை, மங்காடு, வாவறை, முன்சிறை, ஏழுதேசம், ஆலவிளை, பனமுகம், இஞ்சிபரம்பு, கோயிக்கல்தோப்பு,  அம்பிபள்ளிக்கல், பருத்திக்கடவு, கலிங்கராஜபுரம்,  ஞாலம்,  கடுக்கரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள நீர் சூழ்ந்ததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதக்கின்றன. வியாழக்கிழமை மழையின் தீவிரம் சற்று குறைந்ததால், ஓரிரு பகுதிகளில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரியான ராமச்சந்திரன் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வெள்ள சேதங்களை கணக்கெடுத்து வருகிறோம். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் தொடர்ந்து நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து முடிவு எடுப்போம் என்றார் அவர். 
ரயில் சேவை தொடக்கம்: நிலச்சரிவால் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்கள், மண் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததால், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பின்னர், நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.