நித்திரவிளை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பண்டிகை காலங்களில் தீயணைப்புத்துறை, காவல்துறையின் அனுமதிபெற்று பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவக் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவிஆய்வாளர் சோபனராஜ் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (54), திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்
ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்

ஜூன் 14-ல் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


