சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

கறச்சிவிளை சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு கறச்சிவிளை அருள்மிகு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா புதன்கிழமை (டிச. 26) தொடங்குகிறது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:16 am IST

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு கறச்சிவிளை அருள்மிகு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா புதன்கிழமை (டிச. 26) தொடங்குகிறது.
இவ்விழாவையொட்டி, கோயிலில் தினமும் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலை சிறப்பு பூஜைகள், வில்லிசை ஆகியன நடைபெறுகிறது. திருவிழாவின் 2 ஆம் நாளன்றுஇரவு 8.30 மணிக்கு 18 ஆம் திருப்படிகள் பூஜை, 3 ஆம் நாளன்று மாலை 6 மணிக்கு பகவதிசேவை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி  சமய மாநாடு நடைபெறுகிறது. 5 ஆம் திருநாளன்று (டிச. 30) பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சுவாமி யானை மீது பவனி நடைபெறுகிறது. கோயிலில் இருந்து புறப்படும் இந்த பவனி அதங்கோடு, குமரபுரி, பாஞ்சிவிளை, ஆலுமூடு, சேனங்கோடு, மடிச்சல், படந்தாலுமூடு, குழித்துறை, ஈத்தவிளை வழியாக கோயிலை வந்தடைகிறது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திங்கள்கிழமை (டிச. 31) காலை சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.