கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தோவாளை ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் நேரில்

Updated On :25 டிசம்பர் 2018, 6:43 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியுமான என்.தளவாய்சுந்தரம்.
தோவாளை ஒன்றியத்துக்குள்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. தடிக்காரன்கோணம் ஊராட்சி செயலர் நாகராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தளவாய்சுந்தரம் பேசியது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுவது முக்கியம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அதிமுகவுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்டச் செயலரும் ஆவின் தலைவருமான எஸ்.ஏ. அசோகன், மேற்கு மாவட்டச் செயலர் ஜான்தங்கம், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஹெப்சிபா, நாகர்கோவில் நகரச் செயலர் சந்துரு, தோவாளை ஒன்றிய இணைச் செயலர் ரமணி, துணைச் செயலர் ஐயப்பன், ரோகிணி, பொருளாளர் தென்கரை மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அவைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.