இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இரணியல் அருகே உள்ள சுண்டன்விளை ரயில்வே கிராஸிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக கோட்டாறு ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உதவி ஆய்வாளர் ராஜபூபதி மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் வில்லுக்குறி தினவிளையைச் சேர்ந்த மனோசபின் (26) என்பதும், இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வாகனங்கள் பழுது நீக்குபவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

