/

பேச்சிப்பாறை, வீயன்னூர் பகுதிகளில் ஜூலை 25 மின்தடை 

பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் புதன்கிழமை (ஜூலை 25) மின்தடை செய்யப்படுகிறது.

Updated On :24 ஜூலை 2018, 12:50 am IST

பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் புதன்கிழமை (ஜூலை 25) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் த. வில்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேச்சிப்பாறை துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வரும் புதன்கிழமை (ஜூலை 25)  கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, சிற்றாறு, களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, உண்ணியூர்கோணம், திருநந்திக்கரை, மணியன்குழி அரசமூடு ஆகிய இடங்களிலும், வீயன்னூர் துணை மின்நிலையப் பகுதிகளில்  ஆற்றூர், தேமானூர், திருவட்டாறு, செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, இரவிபுதூர் கடை, பள்ளியாடி, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.