தக்கலை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், புதுக்கடையை அடுத்த ஐரேனிபுரத்தைச் சேர்ந்தவர் ஐசக் (55) . இவர் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சல் கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஷீலா. இவரும் அதே சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார்.
இந்நிலையில், ஐசக்கிற்கு திங்கள்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதற்காக ஐசக்கை ஒரு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அவரது மனைவி ஏஞ்சல், ஷீலா ஆகியோர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோ கல்லுவிளையில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலையில் திரும்பியபோது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த ஐசக், அவரது மனைவி ஏஞ்சல் மற்றும் ஷீலா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர் மோசஸ் காயமடைந்தார்.
காயமடைந்த 4 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, தக்கலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐசக் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்ற இருவரும் தக்கலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


