குமரி மாவட்டம், சுவாமியார்மடம் அருகே நெடியாங்கோடு செல்லும் சாலையில் சிற்றாறு பட்டணங் கால்வாயில் நீர்வரத்தைப் பாதிக்கும் வகையில் நடைபெற்றுவரும் தனியார் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி அளித்துள்ள மனு:
கல்குளம் வட்டம், வியன்னூர் கிராமத்திற்குள்பட்ட சுவாமியார் மடம் என்ற இடத்தின் அருகில் வேர்கிளம்பி சாலை பகுதியில் சிற்றாறு பட்டணங்கால்வாய் செல்கிறது.
இதில், நெடியாங்கோடு செல்லும் உள்புற சாலை திருப்பத்தில் பாலம் அருகிகே வலதுகரையோரம் மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாலத்தை மறைத்து கால்வாயில் நீர் செல்லும் உள்புற பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் ஒருவர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மக்கள் அளித்த தகவலின்பேரில், குழித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, கட்டுமானப் பணியை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. எனினும், சானலின் அடிவாரப் பகுதியில் தொடர்ந்து கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம் தனக்குச் சொந்தமானது என அந்த நபர் மிரட்டி வருவதாகவும் தெரிகிறது.
இந்த இடம் 50 ஆண்டுகளுக்கு முன் நல்லெண்ண அடிப்படையில் சிலர் அரசுக்கு விட்டு கொடுத்த இடமாகும். இதுகுறித்து கடந்த 6 ஆம் தேதி மாவட்ட நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர், 7 ஆம் தேதி பத்மநாபபுரம் துணை ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆட்சியருக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சிற்றாறு பட்டணங்கால்வாயின் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, கட்டடத்தையும் முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

