கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சிற்றாறு அணையிலிருந்து 2ஆவது நாளாக உபரி நீர் வெளியேற்றம்: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் 2ஆவது நாளாக சிற்றாறு அணையிலிருந்து உபரி நீர் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டது.

Updated On :22 அக்டோபர் 2018, 7:57 pm

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் 2ஆவது நாளாக சிற்றாறு அணையிலிருந்து உபரி நீர் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தற்போது தொடர் மழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக அணைகளுக்கு உள்வரத்து நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அணைகளிலிருந்து  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
முக்கிய அணைகளான  சிற்றாறு அணைகளில் நீர்மட்டம் 16 அடிக்கும் கூடுதலாக உள்ள நிலையில் அந்த அணைகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 546 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமையும் இதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு சிற்றாறு அணையிலிருந்து உபரி  நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. திங்கள்கிழமையும் இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சிற்றாறு உபரி நீர் காரணமாக குழிததுறை தாமிரவருணியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.
பெருஞ்சாணியில் தொடர்ந்து வெள்ள அபாயம்: தற்போது பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான  72 அடியை எட்டிய நிலையில் உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயரும் பட்சத்தில் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. 
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விடிய, விடிய  கன மழை கொட்டித் தீர்த்தநிலையில், திங்கள்கிழமை காலையிலும் மழை பெய்து கொண்டிருந்தது. அதன் பிறகு மாலை வரை மழை மேகங்கள் சூழ்ந்த நிலையே பெரும்பாலான இடங்களில் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணிக்குப் பின்னர் மீண்டும் மழை தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.