அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நியாயவிலைக் கடை அருகே பதுக்கிய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டம்,  முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:25 am

குமரி மாவட்டம்,  முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடை அருகே பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன்,  தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்  ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாலையில் முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அப்பகுதி நியாய விலைக்கடையின் அருகே சந்தேகப்படும் வகையில் சாக்குமூட்டைகள் இருந்தது தெரியவந்தது. 
அந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.  இதையடுத்து ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.