ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மூளகுமூட்டில் அமைதி பேரணி, கூட்டுத் திருப்பலி

காஷ்மீர்  தாக்குதலில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை

Updated On :25 பிப்ரவரி 2019, 10:03 am IST

காஷ்மீர்  தாக்குதலில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில்  கூட்டுத் திருப்பலி,  அமைதி பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், முளகுமூடு கத்தோலிக்க சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்கு  குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார்.  அருள்பணியாளர்கள்  ஜெரால்டு ஜஸ்டின், ஆன்றனி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
நினைவு திருப்பலியில்   வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும்,  அவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்க  சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது. 
திருப்பலி முடிவுற்றவுடன்  மறை மாவட்ட  குருகுல முதல்வர்  ஜேசுரெத்தினம் தலைமை வகிக்க கத்தோலிக்க சங்கத்  தலைவர் பிரைட் சேவியர்  முன்னிலையில் அமைதி பேரணி  நடைபெற்றது. 
பின்னர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களின் புகைப்படத்துக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.