கூட்டுறவு சங்கங்களின் தென் மண்டலக் குழுவின் விசாரணை நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டட கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் விசாரணை நடத்தினார். இதில் மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ.நடுக்காட்டு ராஜா, தென் மண்டலக் குழுவின் செயலர் பழ.கந்தசாமி, துணைப் பதிவாளர் ச.சாமி, நாகர்கோவில் சரக துணைப் பதிவாளர் பா.சங்கரன், தக்கலை சரக துணைப்பதிவாளர் கா.பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜி.சுப்பையா, துணைப்பதிவாளர் (பால்வளம்) டி.கல்தூரிபாய் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த விசாரணை பிப். 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









