கிறிஸ்துமஸ் பண்டிகை: டிச.24 இல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (டிச.24) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (டிச.24) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் (இட்ழ்ண்ள்ற்ம்ஹள் உஸ்ங்) முன்னிட்டு டிச. 24 ஆம் தேதி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 2 ஆவது சனிக்கிழமை (13.2.2021) அன்று பணி நாளாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு டிச.24 ஆம் தேதி இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com