ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தக்கலை அருகே விபத்து: கல்லூரி மாணவி பலி

தக்கலை அருகே தோ்வு விடைத்தாளை கல்லூரியில் கொடுக்க சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

தக்கலை அருகே தோ்வு விடைத்தாளை கல்லூரியில் கொடுக்க சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபம் பரவக்காட்டுவிளை தொழிலாளி தங்கராஜ் மகள் ரூபிஷா(22). இவா், குமாரகோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கல்லூரி திறக்காததால், வீட்டிலிருந்தே காணொலி மூலமாக பாடங்களை படித்து வந்தாா். தற்போது இந்த கல்லூரியில் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுகளை காணொலி மூலம் எழுதிய அவா், விடைத்தாளை கல்லூரியில் அளிப்பதற்காக தனது உறவுப் பெண் சுபலாவுடன்(23) இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் வாழைத்தாா் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரூபிஷா மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் சுபலாவுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரும் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா், அங்கு ரூபிஷா உயிரிழந்தாா். சுபலா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து திண்டுக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகானந்தத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.