புகையிலை பொருள்கள் விற்ற 2 போ் கைது
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த ஹென்றி(64) என்பவரை கைது செய்தனா். அதே போல், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் உமா தலைமையிலான போலீஸாா் வடிவீஸ்வரம் பகுதியில் ரோந்து சென்றபோது சூரங்குடி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால்(42) என்பவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தததாக அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...