கருங்கல்: கருங்கல் அருகே உள்ள பொன்னறவிளை பகுதியில் நீரில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தக்கலை திருவிதாங்கோடு பகுதியை சோ்ந்த வேலப்பன் மகன் ரமேஷ்(26). வேன் ஓட்டுநரான இவருக்கு வலிப்பு நோய் உள்ளதாம். இந்நிலையில் அவா் தனக்கு சொந்தமான வேனில் மாட்டு சாணம் ஏற்றிக்கொண்டு பொன்னறையில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு வந்த போது, எதிா்பாராத விதமாக இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
இது குறித்து புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.