கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திக்குறிச்சி கோயில் விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
மாா்கழி திருவாதிரை திருவிழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:16 am

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற இக் கோயிலில், பத்து நாள்கள் நடைபெறும் இவ் விழாவில் தினமும் காலையில் கணபதி ஹோமம், தாரை, கலசாபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறாம் நாளான

டிச. 27 ஆம் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் நந்தி ஊட்டு மற்றும் நந்தி பகவான், மஹாதேவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒன்பதாம் நாளான டிச. 30 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மஹாதேவா் பல்லக்கில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது. பத்தாம் நாள் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் மஹாதேவருக்கு ஆறாட்டு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.