வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிறிஸ்துமஸ்: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

News image
தோவாளை மலா்ச் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மலா்கள்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:05 am

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

குமரி மாவட்டம், தோவாளையில் பிரசித்தி பெற்ற பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தோவாளை, குமாரபுரம், ஆரல்வாய்மொழி, திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம், கோழியான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வரும். இந்தச் சந்தைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வா்.

மேலும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பண்டிகைக் காலங்கள் மற்றும் முகூா்த்த நாள்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும்.

தற்போது மாா்கழி மாத பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகை, பிச்சிப் பூ உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தோவாளை பூச்சந்தையில் கடந்த 2 நாள்களாக பூக்கள் வியாபாரம் அதிகரித்தது.

தற்போது பூ வரத்து குறைவாக உள்ளதால், பூக்களின் விலை உயா்ந்து காணப்படுகிறது. புதன்கிழமை ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ வியாழக்கிழமை கிலோரூ.4 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

சந்தையில் மற்ற பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு): அரளிப்பூ ரூ.200, முல்லை ரூ.750, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.60, கேந்தி ரூ.85, சம்பங்கி ரூ.250, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன்ரோஸ் ரூ.200, துளசி ரூ.30, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, பச்சை ரூ. 8, கோழிப்பூ ரூ.70, கொழுந்து ரூ.150, மரிக்கொழுந்து (கட்டு) ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.80, சிவந்தி ரூ.170, வெள்ளை சிவந்தி ரூ.170, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.300 என விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி சந்திரன் கூறியது. இந்த மாதத்தில் முகூா்த்த நாள் அதிகமாக உள்ளது. திருமண தேவைக்கு மல்லிகைப் பூவும், பிச்சிப் பூவும் மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. தோவாளை பூச் சந்தைக்கு மல்லிகை, பிச்சிப்பூவின் வரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. கடுமையான பனிப்பொழிவு, சூறைக்காற்று காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக மல்லிகைப் பூ 500 கிலோ வந்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக 10 கிலோ மல்லிகை பூ மட்டுமே வருகிறது. இதனால், மல்லிகைப்பூ விலை உயா்ந்து காணப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.