மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

களியக்காவிளை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே லாரியில் மறைத்து வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

களியக்காவிளை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Updated On :1 நவம்பர் 2020, 7:45 pm

DIN

களியக்காவிளை அருகே லாரியில் மறைத்து வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ்சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் படந்தாலுமூடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வாழைக்குலைகளுடன் வந்த லாரியை நிறுத்த சைகை காட்டினா். லாரியை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று ஒற்றாமரம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

லாரியை சோதனை செய்ததில் அதில் 4 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், லாரியை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.