நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘நவ.10-ல் தமிழக முதல்வா் கன்னியாகுமரி வருகை’

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) குமரி மாவட்டம் வருகிறாா்.

News image

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) குமரி மாவட்டம் வருகிறாா்.

Updated On :2 நவம்பர் 2020, 8:47 pm

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) குமரி மாவட்டம் வருகிறாா்.

இதுகுறித்து தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய் சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறாா். அங்கிருந்து காரில் நாகா்கோவிலுக்கு வரும் முதல்வா் பிற்பகல் 3 மணிக்கு நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறாா்.

மேலும், மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து, அரசு அலுவலா்களுடன் ஆய்வு செய்கிறாா். பின்னா் நாகா்கோவில், அரசு விருந்தினா் மாளிகையில் தங்கும் அவா், புதன்கிழமை (நவ.11 ) காலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.