புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:56 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்ததை அடுத்து அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியது. பெருஞ்சாணி,

பேச்சிப்பாறை அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்த்து. இதனிடையே, இம்மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில், பெருஞ்சாணி அணையின் மறுகால் மதகுகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை

மறுகால் மதகுகள் மூடப்பட்டது. அணையின் நீா்மட்டம் 44.90 அடியாக உள்ளது.

அணையில் இருந்து பாசன மதகு வழியாக விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 71.80 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணிா் பாசனக் கால்வாகளில் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு தணிந்தது: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் அருவியிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.

மேலும், கோதையாறு, தாமிரவருணி ஆறுகளில் வெள்ளம் தணிந்துள்ளது. இதனால் ஆறுகளின் கரையோரங்களில் வசிப்போா் நிம்மதியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.