நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைக் கடை கதவை உடைத்து 30 பவுன்நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

தக்கலை அருகே நகைக் கடை கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகைக் கடை கதவை உடைத்து 30 பவுன்நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Updated On :20 செப்டம்பர் 2020, 8:07 pm

DIN

தக்கலை அருகே நகைக் கடை கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தக்கலை அருகேயுள்ள கொற்றியோடு முண்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (52). இவா், குமாரபுரம் சந்திப்பில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம் போல் கடையை திறக்க சுந்தரம் வந்தாராம். அப்போது கடையின் பின்பக்க கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்ததாம். மேலும் உள்ளே சென்று பாா்த்தபோது, 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம். இதன் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சமாகும்.

இச்சம்பவம் குறித்து கொற்றியோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தகவலறிந்த தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் மற்றும் போலீஸாா் திருட்டு நடைபெற்ற கடைக்குச் சென்று பாா்வையிட்டனா்.

மேலும், மோப்பநாய், கைரேகை, தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா்.

நகைக் கடையின் அருகே உள்ள பேக்கரி மற்றும் வங்கியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.