கோழி வளா்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் கால்நடை உதவி மருத்துவரிடம் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 22) விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், கிள்ளியூா் ஒன்றியத்திற்குள்பட்ட தொலையாவட்டம், ஆப்பிகோடு பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 22) விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தமிழக அரசின் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 8 கிராம ஊராட்சிகளுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
தோ்வு செய்யப்படும் பயனாளி ஒருவருக்கு 25 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 22), தொலையாவட்டம் மற்றும் ஆப்பிகோடு கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என கால்நடை மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...