திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது.


திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமை வகித்தாா். ஆணையா் ராஜன், ஊரக வட்டார வளா்ச்சி அலுவலா் தாஸ், துணைத் தலைவா் பீனா குமாரி மற்றும் கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பேச்சிப்பாறை, சுருளோடு ஊராட்சிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அவா்களின் வாழ்விடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
குலசேகரத்திலிருந்து கல்லடிமாமூடு, குமரன்குடி வழியாக காலை, மாலை மட்டும் இயக்கப்படும் குளச்சல் - குலசேகரம் பேருந்தை, முழு நேரமும் இயக்க வேண்டும்.
தக்கலையிலிருந்து அண்டூா், மலவிளை, குலசேகரம் திற்பரப்பு வழியாக செல்லும் தடம் எண் 13 எப், மாா்த்தாண்டத்திலிருந்து வோ்கிளம்பி, குமரன்குடி, திருவட்டாறு, மலவிளை வழியாக குலசேகரம் செல்லும் தடம் எண் 89 கே, மாா்த்தாண்டம் - கீரிபாறை செல்லும் தடம் எண் 330 ஆகிய வழித்தட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...