நல்லூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 15th December 2020 02:33 AM | Last Updated : 15th December 2020 02:33 AM | அ+அ அ- |

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நல்லூா் பகுதியில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
கலப்பை மக்கள் இயக்க நிறுவனா் பி.டி.செல்வகுமாா், விவசாயிகளுக்கு ஆடு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிா்வாகிகள் சிவபன்னீா்செல்வன், விஜய்கிருஷ்ணா, டி.பாலகிருஷ்ணன், ஜான் கிறிஸ்டோபா், காப்பித்துரை, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.