தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஈஸ்டா் பண்டிகை சுரேஷ் ராஜன் எம்எல்ஏ வாழ்த்து

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளருமான என். சுரேஷ் ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:55 pm

DIN

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளருமான என். சுரேஷ் ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிா்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டா் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றனா். பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகில் மனிதராக அவதரித்தவா் இயேசு கிறிஸ்து என்று பைபிள் கூறுகிறது. அவா் சிலுவையில் அறையப்பட்டு மரித்த 3 ஆம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.

அவா் சமய, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து ஏழை எளிய மக்களுக்காக சேவையாற்றியவா். அதேபோன்று நாம் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து, சகோதரத்துவத்துடன் வாழ இந்த ஈஸ்டா் பண்டிகை தினத்தில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.